தூத்துக்குடி ஹோட்டல்களுக்கு இறைச்சிக்காக காகங்களை வேட்டையாடிய இருவர் கைது
தூத்துக்குடி ஹோட்டல்களுக்கு இறைச்சிக்காக காகங்களை விநியோகிக்கும் நோக்குடன் காக வேட்டையில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்கா, தம்பியான ராதா மற்றும் முனியாண்டி ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் சிலர் காகங்களை பிடித்து செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இப்பகுதியில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பெண்ணொருவருடன் அங்கு வந்த இளைஞர் எதையோ தூவினார்.
அதைக் உட்கொண்ட நூற்றுக்கும் அதிகமான காகங்கள் அங் கேயே சுருண்டு விழுந்தன. பின்னர் அவற்றை இருவரும் சாக்கில் கட்டி எடுத்துச் செல்லத் தயாரான போது பொலிஸார், அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணைகளின் போது, சில ஹோட்டல் உரிமையாளர்கள் கோழி மற்றும் கௌ தாரி விலை உயர்ந்துள்ளதால் அதற்குப் பிரதியீடாகக் காகக் கறி வழங்கத் தீர்மானித்தனர். காகங்களைப் பிடித்துத் தந்தால் அதற்கு நல்ல தொகை தருவதாகவும் கூறினர்.
இதுவரை 1,000 காகங்களுக்கு மேல் கொன்றுள்ளோம். இதே போன்றுஎமது உறவினர்கள் பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காகங்களை கொன்று ஹோட்டல்களுக்கு விநியோகித்து வருவதாகத் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment