இரண்டாம் உலகப் போர்க் கால லண்டன் சுரங்கம் ஏலத்தில்
1940 களில் மத்திய லண்டனில் இரகசிய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட சுரங்கத் தொகுதியொன்று ஏல விற்ப னைக்கு விடப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வாளர்களின் இருப்பிடமாக விளங்கிய மேற்படி சுரங்கத் தொகுதி, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான பனிப் போரின் போது தொலைபேசி தொடர்புகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகும்.
1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சுரங்கமானது இரண்டாம் உலகப் போர் காலத்தில் குண்டு வீச்சுக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக 8000 பேருக்கான புகலிடமாக விளங்கியது.
எனினும் அதன் பிற்பாடு இராணுவத்தால் இந்த சுரங்கம் பொறுப் பேற்கப்பட்டு, தொலைத்தொடர்பாடல் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment