பூங்கொத்துடன் மன்னிப்பு கடிதம் அனுப்பிய பிரித்தானிய திருடன்
91 வயதுடைய வயோதிப பெண்ணை கொள்ளையிடும் முகமாக அச்சுறுத்திய திருடன் ஒருவன், அவரிடம் மன்னிப்புக் கோரி பூங்கொத்தை அனுப்பி வைத்த விசித்திர சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வட லண்டனிலுள்ள ஹாலிபாக்ஸில் அமைந்துள்ள மேற்படி பெண்ணின் வீட்டினுள் கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நுழைந்த மேற்படி திருடன், பெண்மணியை அச்சுறுத்தி அங்குள்ள பெட்டகமொன்றை பலவந்தமாக உடைத்துள்ளான்.
எனினும் பெட்டகத்தில் எதுவும் இல்லா மல் இருப்பதைக்கண்ட அவன், வெறும் கையுடன் சென்றுள்ளான்.
இந்நிலையில் அவன் மேற்படி மன்னிப்புக் கடிதத்துடன் பூங்கொத்தொன்றை வயோதிப மாதுக்கு அனுப்பிவைத்துள்ளான்.
பெண்மணியை அச்சுறுத்தியமைக்காகவும் வெற்றுப் பெட்டியை உடைத்தமைக் காகவும் அக்கடிதத்தில் திருடன் மன்னிப்புக் கோரியிருந்தான்.
இது தொடர்பில் யோக்ஷியர் நகர பொலிஸ் அதிகாரி ரோனி நிகல்ஸன் விபரிக்கையில், ""யார் இதைச் செய்திருந்தாலும் அவர் தார்மீக உணர்வுமிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. தான் செய்தது தவறு என்பதை அவர் உணர்ந்துள்ளதை இதுஎடுத்துக்காட்டுகிறது'' என்று தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment