ஒரிஸா பெண் கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கை அகதிக்கு வலைவீச்சு
தூத்துக்குடி அருகே ஒரிஸா பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அகதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஒரிஸா மாநிலம் மால்கம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூர்தேசி மண்டல் (வயது 40) என்பவரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் இலங்கை அகதி அன்பு என்பவரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கூர்தேசி மண்டலின் கணவர் கண்ணை மண்டல் மனைவி மற்றும் மகனுடன் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள வடக்கு வேலாயுதபுரத்தில் தங்கியிருந்து அங்கு தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த 24ஆம் திகதி கூர்தேசி மண்டல், அவரது வீட்டருகே இருந்த மற்றொரு வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டார் என புதியம்புத்தூர் பொலிஸார் உறுதி செய்தனர்.
சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த சிலரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
அதில் ஒருவர் இலங்கை அகதி அன்பு.
அவரது திருப்பூர் முகவரிக்குச் சென்று விசா?த்த போது விலாசமும், அவரது பெயரும் போலியானது என தெரியவந்தது.






0 விமர்சனங்கள்:
Post a Comment