விமான படிக்கட்டில் வழுக்கி விழுந்த ஜெ.க்கு கோபம்

சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக விமானத்தில் ஏறிய ஜெயலலிதா படிக்கட்டில் நிலை தடுமாறி வழுக்கியுள்ளார். இதையடுத்து பயணத்தை ரத்துச் செய்துவிட்டு கோபமாக காரில் ஏறி வீடு திரும்பியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 101 ஆவது குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்றுக் காலை மதுரை செல்ல முற்பட்ட போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதற்காக நேற்றுக் காலை 10.55 மணிக்கு சசிகலா, ஜெ.யின் உதவிப் பெண் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோருடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை விமான நிலையம் வந்தார்.
அவருக்கென பிரத்தியேகமாக மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் விமானத்தில் ஏறும் போது திடீரென படிக்கட்டில் நிலை தடுமாறி வழுக்கினார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருவழியாக அவராகவே சமாளித்துக் கொண்டு நின்றார்.
படிக்கட்டிலேயே 5 நிமிடங்கள் நின்றிருந்த ஜெயலலிதா, பின்னர் கோபத்துடன் கீழே இறங்கி காரைக் கொண்டு வரச் சொல்லி அதில் ஏறி போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment