இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகம் எங்கும் கடையடைப்பு
இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை மற்றும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து, கடந்த 17ஆம் திகதி கடையடைப்புப் போராட்டம் நடத்த வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருந்தது. இந்நிலையில், முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அரசுக்கு 2 வார கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடையடைப்பு போராட்டத்தை வணிகர் சங்கங்களின் பேரவை பின்போட்டது. தொடர்ந்து 31ஆம் திகதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கப் பேரவை அறிவித்தது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு, டீக்கடை உரிமையாளர் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம், தையல் கலைஞர் சங்கம் உள்பட பல்வேறு வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் சிறு வணிகர் முதல் பெருவணிகர் வரை கலந்து கொள்கின்றனர். இதனால், இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment