ஆர்ஜென்டீனாவில் மணித்தியால கட்டண அடிப்படையில் கணவர்மார்களை வாடகைக்கு விடும் சேவை
ஆர்ஜென்டீனாவில் கம்பனியொன்று மணித்தியால கட்டண அடிப்படையில் கணவர்மார்களை வாடகைக்கு விடும் சர்ச்சைக்குரிய சேவையை வழங்கி வருகிறது.
மேற்படி மணித்தியால வாடகைக்கு விடப் படும் இந்த கணவர்மார், படுக்கையறையிலான தொந்தரவுகளுக்கு இடம் தராமல் வீட்டு திருத்த வேலைகள் உள்ளடங்கலான அனைத்து பணிகளையும் ஒரு கணவரைப் போன்று கவனித்துக் கொள்வதாக மேற்படி நிறுவனத்தின் உரிமையாளரான டானியல் அலொன்ஸோ தெ?வித்தார்.
""உங்கள் கணவர், வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் உங்கள் தலையில் சுமத்தி விட்டுப் போய் விட்டாரா? அல்லது உங்கள் மனைவி 1001 வீட்டுத் திருத்தங்களைச் செய்யும்படி நச்சரிக்கிறாரா? விவாதத்தை நிறுத்துங்கள்.
உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என இந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணித்தியாலத்துக்கு 15.50 டொலர் என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வழங்கப்படும் இந்த வாடகைக் கணவர்மாரின் சேவைக்கு நகரில் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தமது வீட்டுத் திருத்த வேலைகளுக்கு பணியாளர் ஒருவரைப் பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ள பெண்கள், போட்டி போட்டுக்கொண்டு இச்சேவையை பெற்று வருவதாக டானியல் அலொன்ஸோ கூறினார்.
மேற்படி சேவையின் உண்மையான நோக்கத்தை தவறாகப் புரிந்து கொண்ட பெண்மணி ஒருவர் அதிகாலை 3.00 மணிக்கு தனது கம்பனிக்கு தொடர்பு ஏற்படுத்தி, ""ஆண் ஒருவர் எனக்குத் தேவை. உடனடியாக அனுப்பி வையுங்கள்'' என்று கட்டளையிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு பெண், ""என் பெயர் கிறிஸ்ரினா.
எனது வயது 56. எனக்கு முழுமையான சேவை வேண்டும்'' என எழுத்து மூல செய்தியை அனுப்பிவைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
12 வருடங்களுக்கு முன் இளைஞர் டானியல் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாள ராக பணியாற்றிய சமயம், அவரது அயல் வீட் டிலிருந்த வயதான தம்பதியினர், தமது இலத்தி ரனியல் உபகரண திருத்த வேலைகளுக்காக டானியலின் மனைவியிடம் "உமது கணவரை சிறிது வாடகைக்கு விட முடியுமா' எனக் கேட்பதும் அதற்கு அவரது மனைவி "எனது கணவரை வாடகைக்கு விடுகிறேன்' என பதிலளிப்பதும் வழமையாக இருந்தது.
இதன்போதே இத்தகைய நிறுவனமொன்றை ஆரம்பிக்கும் திட்டம் டானியலின் மூளையில் உதித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment