ஓய்வு பெற்ற பொலிஸ் நிலைய பூனைக்கு பிரிவுபசார வைபவம்
லண்டனிலுள்ள சினோ ஹில் பொலிஸ் நிலையத்தில் எலிகளை வேட்டையாடும் பணிக்கு நியமிக்கப்பட்ட பூனையொன்று, பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு விசேட பிரிவு உபசார வைபவம் நடத்தப்பட்டது.
இதன்போது நகரிலுள்ள 100 சதவீதமான எலிகளை கச்சிதமாக பிடித்து இப்பூனை ஆற்றிய அரிய சேவையை முன்னிட்டு அதற்கு விசேட கௌரவம் அளிக்கப்பட்டது.
மேற்படி றீகன் என்ற வெள்ளை நிறப் பூனை, 1997 ஆம் ஆண்டு 8 மாத வயதாக இருக்கும்போது பெலின் என்று பூனையுடன் பொலிஸ் தலைமையகத்தில் அட்டகாசம் செய்யும் எலிகளை வேட்டையாட நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பெலின் 18 மாத காலத்தில் இறந்துவிட, றீகன் தன்னந்தனியாக எலிகளை வேட்டையாடும் பணியில் திறமையாக ஈடுபட்டதாக மேற்படி பொலிஸ் நிலைய உத்தியோகத் தரான ஜேன் கிங் தெரிவித்தார்.
இந்தப் பூனையின் பிரபல்யம் காரணமாக அதற்கென "பேஸ்புக்' இணையத்தளத்தில் தனிப் பக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்தரின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட இப் பூனையை கௌரவப்படுத்தும் முகமாக, இப் பூனை தொடர்பான தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இப் பூனை மேற்படி பொலிஸ் நிலை உத்தியோகத்தர் ஒருவரின் பெற்றோரின் செல்லப் பிராணியாக மாறியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment