உலகின் முதலாவது அணுசக்தி நிலவறை நட்சத்திர ஹோட்டல்
சுவிட்ஸர்லாந்தானது உலகின் முதலாவது அணுசக்தி நிலவறை பூச்சிய நட்சத்திர ஹோட்டலை திறந்து வைத்துள்ளது.
நிலத்தின் கீழ் பல அடி ஆழத்தில் அமைந்துள்ள ?ன்னாள் அணுசக்தி நிலக்கீழ் தளம், தற்போது கவர்ச்சிகரமான ஹோட்டலாக உருவெடுத்துள்ளது.
இக் ஹோட்டலின் ஆரம்ப விழாவன்று 15 விருந்தினர்கள் இரவுப் பொழுதை இக் ஹோட்டலில் கழித்தனர்.
எனினும் இது பரீட்சார்த்த ஆரம்ப விழா மட்டுமேயாகும். அதனது வழமை யான செயற்பாடுகள் உரிய அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
""உயிராபத்து மிக்க ஆயுதத்தை உருவாக்கப் பயன்பட்ட தளத்தை பயன்படுத்தி, குறைந்த செலவிலான ஹோட்டலொன்றை உருவாக்கியுள்ளோம். இந்த ஹோட்டலானது பெருமளவு விருந்தினர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது என மேற்படி அணு ஆயுத தளத்தை கவர்ச்சிமிக்க ஹோட்டலாக உருவாக்க உள்ளூர் அதிகா?களால் நியமிக்கப்பட்ட இரட்டைச் சகோதரர்களான பிராங் றிக்லின் மற்றும் பற்றிக் லிக்லின் ஆகியோர் தெரிவித்தனர்.
மேற்படி ஹோட்டலில் தங்க ஒரு இரவுக்கு 9 டொலருக்கும் 13 டொலருக்கும் இடைப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment