நடனமாடி அசத்தும் ரோபோ
கொரிய விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவகத்தால் அதன் சியோலிலுள்ள காட்சியறையில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட கண்காட்சியில், "மஹ்ரு' என்ற புதிய ரோபோ ஒன்று நடனமாடி பார்வையாளர்களை அசத்தியது.
அரசாங்க நிதியுதவியுடன் மேற்படி நிறுவகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோ போவானது, நடனமாடும் போது நடனத்திற்கு ஏற்ப உதடுகள், கண் இமைகள் என்பனவற்றை அசைப்பது சிறப்பம்சமாகும்.
இந்த ரோபோ நடக்கும் போது அதன் உடலின் மேல் பகுதியை விரும்பியவாறு அசைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
அத்துடன் இது தனது உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கு ஏற்ப இருவகை நறுமணங்களையும் வெளிப்படுத்துகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment