முதல்வர் கருணாநிதிக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்
தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை நேரில் பார்க்குமாறு தாம் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
எமது இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக விடுதலைப் புலிகளுக்கு எதிரானவை. அது ஒரு பயங்கரவாதப் பிரிவினைவாத அமைப்பு.சகல வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரான, உறுதியான எதிர்ப்பை இந்தியாவுடன் இணைந்து பகிர்ந்து கொள்கிறேன்.
வடபகுதியில் மோதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இந்தியா 800 தொன் நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசும் பங்களிப்புச் செய்யவுள்ளமை வரவேற்கத்தக்கது. இலங்கை அரசு இந்த நிவாரணப் பொருட்களை வழங்குவதில் இந்தியாவுக்கு உதவும். மேலும் மனிதாபிமான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசனைகளை மேற்கொள்ளும். அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவு குறித்து நான் மிகுந்த திருப்தியடைந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை எம்மிடையேயான இரு தரப்பு உறவுகளில் இதுவே மிகச்சிறந்த தருணம் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment