ஜேர்மனிய விவசாயிக்கு பொருத்தப்பட்ட பிறிதொருவரின் கரங்கள் இயங்க ஆரம்பிப்பு
உலகின் முதலாவது முழுமையான இரு கைகள் மாற்றுச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஜேர்மனிய விவசாயி, அக் கைகள் மூலம் சில அடிப்படை பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளதாக மேற்படி சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். எனினும் மேற்படி விவசாயியான 54 வயதுடைய கார்ல் மெர்க், தனது புதிய கரங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பில் பூரணமாக கற்றுக்கொள்ள மேலும் இரு வருட காலம் செல்லலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 15 மணி நேர அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு கார்ல் மெர்க்கிற்கு இறந்த நபரொருவரிடமிருந்து தானமாக பெற்ற கரங்கள் பொருத்தப்பட்டன. அவர் ஆறு வருடங்களுக்கு முன்பு பண்ணையில் இடம்பெற்ற விபத்தில் தனது கரங்களை இழந்திருந்தார். இந்த சிக்கல் மிகுந்த கரங்கள் மாற்று சத்திர சிகிச்சையை 40 சத்திரசிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் வல்லுநர்கள் மற்றும் தாதிகளை உள்ளடக்கிய 5 குழுவினர் மேற்கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment