தனது நண்பனின் விதவை மனைவியை கரம்பிடித்த உலகின் மகா பருமனான மனிதர்
உலகின் மிகப் பருமனான மனிதனாக கடந்த ஆண்டு "கின்னஸ்" சாதனைப் பதிவுப் புத்தகத்தில் இடம்பிடித்த மெக்ஸிக்கோவைச் சேர்ந்த மானுவேல் உரிபே, தனது நண்பனின் விதவை மனைவியை சென்ற ஞாயிற்றுக்கிழமை கரம் பிடித்தார்.
மேற்படி திருமண வைபவமானது "பெரிய பருமனான மெக்ஸிகனின் திருமணம்" என்ற தலைப்பில் அமெரிக்க "டிஸ்கவரி" தொலைக்காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டது.
இவ்வருட ஆரம்பத்தில் 590 கிலோ கிராம் நிறையை உடையவராக இருந்த மானுவேல் உரிபே (43 வயது), தனது தீவிர முயற்சியின் பயனாக தனது எடையை 230 கிலோகிராமால் குறைத்தார்.
திருமண நிகழ்வுக்காக வீட்டில் படுக்கையை விட்டு எழும்ப முடியாத நிலையிலிருந்த மானுவேல் உரிபே, படுக்கை சகிதம் பாரந்தூக்கியால் டிரக் வண்டியில் ஏற்றப்பட்டு திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டது இந்த திருமண வைபவமா னது டிஸ்கவரி தொலைக்காட்சியால் படமாக்கப்பட்ட அதேசமயம், ஏனைய புகைப்படக்காரர்கள் எவருக்கும் அத்திருமணத்தை புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி அந்நிகழ்வை புகைப்படம் எடுப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
1992 ஆம் ஆண்டு முதல் உடல் பருமனால் துன்பப்பட்டு வந்த மானு வேல் உரிபே, நான்கு வருடங்களுக்கு முன்பு மரணப்படுக்கையிலிருந்த தனது நண்பனை சந்திக்க சென்ற போது அவரது மனைவியான கிளாடியா ஸொலிஸை சந்தித்தார்.
மானுவேல் உரிபேயின் நண்பரும் 250 கிலோகிராம் எடையுடைய உடல் பருமனான மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர் மரணமடைந்து விடவும் அவரது மனைவியான கிளாடியா ஸொலிஸுக்கும் உரிபேக்கும் இடையே நட்பு இறுக்கமாகி காதலாக மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment