"வயாக்ராவின் மகன்" உதயம்
பாலியல் ஊக்குவிப்பு மாத்திரையான வயாக்ரா அறிமுகமாகி ஏற்படுத்திய சர்சைஓய்வதற்கு இடையில், பிரித்தானிய விஞ்ஞானிகள் வயாக்ராவை விட துரிதமாக பலனளிக்கக்கூடிய புதிய பாலியல் மாத்திரையை உருவாக்கி யுள்ளனர்.
"அவனாபில்" என்ற இந்த மாத்திரையானது "வயாக்ராவின் மகன்" என செல்லமாக அழைக்கப்படுகிறது.
"வயாக்ராவானது செயற்பட 30 நிமிடங்கள் வரை செல்லும். ஆனால் இந்த "மகன்" மாத்திரையானது 15 நிமிடங்களுக்குள் கைமேல் பலன் அளிக்கும்'' என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வயாக்ராவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபட குறைந்தது 8 மணித்தியாலங்கள் செல்லும். ஆனால், இந்த "மகன்" மாத்திரையானது ஒன்றரை மணி நேரத்தில் அதனைப் பாவனை செய்தவர் இயல்பு நிலைக்கு திரும்ப வழிவகை செய்கிறது.
வயாக்ரா பாவனையின் போது ஏற்படும் தலைவலி போன்ற உடல் உபாதைகளும் இம்மாத்திரை பாவனையின்போது கணிசமான அளவு குறைவாக காணப்படுவதாக இந்த புதிய மாத்திரை தயாரிப்பில் பங்கேற்ற பேராசிரியர் பிரான்ஸ்செஸ்கோ சஸ்ஸோ தெரிவித்தார்.
இந்த மாத்திரை தொடர்பான பரீட்சார்த்த பரிசோதனைகள் தற்போது ரோமிலுள்ள சக்ரெட் ஹார்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment