வீட்டுப் பாடத்தை செய்ய மறந்த 11 வயது மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்
11 வயது மாணவனை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் எகிப்தின் அலெக்ஸாண்ட்றியா நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாத் ஓத்மான் என்ற பாடசாலையில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஹய்தம் நபீல் அப்தெல்ஹமீத் என்ற மேற்படி நபர், இஸ்லாம் அம்ரோ என்ற மாணவன் வீட்டு பாடத்தை செய்து வராததால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
முதலில் அடிமட்டத்தால் அம்ரோவை அடித்த நபீல், ஆத்திரம் தீராத நிலையில் வகுப்பறைக்கு வெளியே அவனை இழுத் துச் சென்று மிக மோசமான முறையில் அவ னது வயிற்றில் அடித்துள்ளார்.
இதனையடுத்து மயங்கி விழுந்த சிறுவன், உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். எனினும் இருதய இயக்கம் நின்று சிறுவன் உயிரிழந்துள்ளான் இந்நிலையில் நபீல், சிறுவனைக் கொல்லும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் பாடசாலை ஒழுங்கை நிலை நாட்டவே முயற்சித்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவர் தற்போது கொலைக் குற்றச்சாட்டின் நிமித்தம் பொலிஸ் பாதுகாவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment