நூடில்ஸின் விலையைத் தவறாக குறிப்பிட்டு எதிர்க்கட்சியினரிடம் வசமாக சிக்கிய ஜப்பானிய பிரதமர்
தனது ஆடம்பர வாழ்க்கை காரணமாக ஏற்கனவே பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஜப்பானிய பிரதமர் தரோ அஸோ, பாராளுமன்றத்தில் நூடில்ஸின் விலை தொடர்பில் விபரிக்கையில் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாக விலை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
உலக நிதி நெருக்கடிகளுக்கிணங்க பொருளாதார பிரச்சினைகளை ஜப்பான் எதிர்கொண்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஜப்பானிய பாராளு மன்றத்தில் ஆராயப்பட்டது.
இதன்போது ஒரு சிறு கோப்பை அளவான நூடில்ஸ் பக்கெட், சிறப்புச் சந்தைகளில் என்ன விலை போகிறது என வினவப்பட்ட போது, ""நூடில்ஸ் என்பது மிகவும் மலிவானது என நான் நினைத்திருந்தேன்.
ஆனால் அது இப்போது 400 யென்னிற்கு விலை போகிறது'' என அஸோ தெரிவித்தார்.
உடனே எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து, அந்த நூடில்ஸின் விலை 170 யென் என கிண் டலாகக் கூறினார்.
உடனே அஸோ குறும்புப் புன்னகையுடன் ""விலையேற்றம் காரணமாக தற்போது நானும் நூடில்ஸை வாங்குவதில்லை. அதனால் எனக்கு அதன் விலை தெரியாமல் போய்விட்டது'' எனத் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment