விமான திருட்டு
அக். 5: விமான கடத்தல் பற்றி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மெக்சிக்கோ நாட்டில் விமானங்களை திருடி சென்று இருக்கின்றனராம்.
அந்நாட்டின் சினோலோவா என்னும் நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான விமான நிறுவனம் ஒன்றில் இருந்து ஆயுதம் தங்கிய திருடர்கள் 5 சிறிய விமானங்களை திருடிச் சென்றுவிட்டனராம்.
அங்கே இருந்த காவலர்களை துப்பாக்கி காட்டி விரட்டி இந்த திருடர்கள் விமானங்களை ஓட்டிச் சென்றுவிட்டனராம். மெக்சிக் கோவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போதை மருந்து கும்பல் இந்த சம்பவத்திற்கு பின்னே இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment