பிரபலங்களின் தோல்வி
பிரேசிலியா, அக். 7: தேர்தல் களத்தில் பிரபலங்கள் போட்டியிடுவதும், அவர்களில் சிலர் மண்ணை கவ்வுவதும் சகஜமானது தான்.
ஆனால், பிரேசில் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பிரபலங்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனராம்.
பிரேசிலில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பல வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழியை கடைபிடித்தனராம்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, சர்வதேச பயங்கரவாதி பில்லேடன், கால்பந்து நட்சத்திரம் ஜிடேன் என பிரபலங்களின் பெயரை போல தங்களது பெயரை மாற்றிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டனராம்.
பிரபலமான பெயர் என்பதால் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது அவர்களது கணக்காம். ஆனால், வாக்காளர்கள் ஏமாறாததால் இந்த வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்து விட்டனராம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment