எவரெஸ்ட்டில் சாதனை
காட்மாண்டு, அக். 6: உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட்டில் இருந்து 3 பேர், பாரசூட்டில் குதித்து சாதனை படைத்திருக்கின்றனர்.
.
மிகவும் சவாலானதாக கருதப்படும் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் மீது ஏறி பலர் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இதுவரை எவரெஸ்ட்டில் இருந்து பாரசூட்டில் குதிக்கும் சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை.
இந்த சாதனையை படைத்ததற்காக 32 பேர் கடந்த சில வாரங்களாக எவரெஸ்ட் முகாமில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இதில் 3 பேர் எவரெஸ்ட்டில் இருந்து பாரசூட்டில் குதித்து சாதனை படைத்தனர்.
இவர்கள் எவரெஸ்ட் மலை சிகரத்தில் இருந்து பாரசூட்டில் இறங்கி வந்தது பறவைகள் பறப்பது போல காணப்பட்டதாக இந்த சாகசத்தை நேரில் பார்த்த மலையேறும் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
எவரெஸ்ட் மலை சிகரத்தில் இருந்து குதிப்பதற்காக இவர்கள் வழக்கத்தை விட பெரிய அளவிலான பாரசூட்டை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment