ராமாயணம் ஷூட்டிங்: நடிகர் அம்பு எய்து கொலை
ராமாயணம் டிவி சீரியல் படப்பிடிப்பின்போது நடிகர் ஒருவர் சக நடிகரை அம்பு எய்து கொலை செய்தார்.
குஜராத் மாநிலம் வதோதராவின் புறநகர் பகுதியில் ராமாயணம் டிவி தொடர் படப்பிடிப்பு நடந்து கொண்டுள்ளது.
இதில் மானு சிந்தா என்பவர் ராவணன் படையின் வீரராக நடிக்கிறார். சாஜித் என்பவரும் அதில் நடித்தார்.
இந்நிலையில் சீரியலில் நடிக்கும் சக கலைஞர்களை காரில் ஏற்றிக் கொண்டு சாஜீத் புறப்பட்டார். அப்போது சிந்தா அங்கு குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு குறுகலான இடத்தில் குதிரையும் காரும் எதிரெதிரே வந்தன. யார் முதலில் செல்வது என்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த சிந்தா, படப்பிடிப்புக்காக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த கூரிய அம்பு போன்ற ஆயுதத்தால் சாஜீத்தை தாக்கினார்.
இதில் சாஜீத் அந்த இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் படப்பிடிப்பு நடந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment