இலங்கை தமிழர்களிற்கு உதவும் முகமாக தமிழ்நாட்டு அரசாங்கம் நிவாரண நிதி மற்றும் பொருட் சேகரிப்பை ஆரம்பித்துள்ளது
நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை தமிழர்களிற்கு உதவும் முகமாக தமிழ்நாட்டு அரசாங்கம் தனியான நிவாரண நிதி மற்றும் பொருட் சேகரிப்பை ஆரம்பித்துள்ளது.
தமிழ் நாட்டு முதலவர் மு. கருணாநிதி அறிக்கையொன்றின் மூலம் பொது மக்களிற்கு இதில் பங்களிப்பு செய்யுமாறு கோரியுள்ளார் . பண உதிவி செய்யவிரும்பும் மக்கள் காசோலை மூலமாக செயலகத்திற்கு அனுப்பிவைக்க முடியுமென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. சேகரிக்கப்படும் நிதியும் நிவாரண பொருட்களும் இலங்கைக்கு அனுப்பபட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகளின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படுமென முதல்வர் கருணாநிதி அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு உதவுவது சகல இந்தியர்களும் , முக்கியமாக இந்திய தமிழர்கள் அனைவரதும் கடமையென தமிழக முதல்வர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வீரகேசரி இணையம்
2 விமர்சனங்கள்:
கலைஞர் அவர்களின் பிச்சை எடுக்கும் போராட்டம் !!!
ஜயா கலைஞர் அவர்களே !!!
இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை நினைத்து பெருமை பட்டேன்!!!
தமிழர்களுக்காக போராட(இன்னொரு) தமிழன் இருக்கிறார் என்று
பெருமை பட்டேன்!!!
ஈழ தமிழர்களுக்காக தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என்று அறிவித்தீர்கள் பெருமை பட்டேன்!!!
தமிழினம் படும் துயர்கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத்தான் மனிதச் சங்கிலி என்று அறிவித்தீர்கள் பெருமை பட்டேன்!!!
ஆனால் இப்பொழுது நீங்கள் அறிவித்திருக்கும் ஈழ தமிழர்களுக்காக பிச்சை எடுக்கும் போராட்டத்தை நினைத்து வெட்கபடுகின்றேன்!!! வேதனை படுகின்றேன்!!!
ஈழத்தை உருவாக்குவோம் என்று கர்ஜித்த சீமான் மற்றும் அமீர் ஆகியோரை கைது செய்யும் பொழுதே சற்று சந்தேகம் அடைந்தேன். காரணம் இல்லாமல் கலைஞர் காய் நகர்த்தமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் காங்கிரஸ் நகர்த்திய காய்க்கு நீங்கள் விழுந்து விட்டீர்கள் என்று நினைக்கும் பொழுது வெட்கபடுகின்றேன்!!! வேதனை படுகின்றேன்!!!
உங்களுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் எம்.பி-க்கள் தேவை இல்லை ஆனால் இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் எம்.எல்.ஏ க்கள் தேவை என்று உணர்த்தி விட்டீர்கள் வெட்கபடுகின்றேன்!!! வேதனை படுகின்றேன்!!!
நீங்கள் ஈழ போராட்டத்தில் காட்டும் தீவிரத்தை குறைத்து கொள்ள வேண்டும் இல்லையேல் தமிழக காங்கிரெஸ் எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா செய்ய வைப்போம் என்று வந்த ஒரு சிறு துண்டு சீட்டினால், எங்களை எங்களுக்காக பிச்சை எடுக்க வெய்த்து விட்டீர்களே. வெட்கபடுகின்றேன்!!! வேதனை படுகின்றேன்!!!
ஜயா கலைஞர் அவர்களே !!!
உங்களுக்கு இன்னும் இரண்டரை வருட ஆட்சி முக்கியமா அல்லது தமிழர்களின் இருபத்தைந்து வருட போராட்டம் முக்கியமா என்பதனை சற்று நினைத்து பாருங்கள்.
உங்கள் ஒட்டு எங்கள் கையில், எங்கள் உயிர் உங்கள் கையில்
இன்னமும் உங்கள் மேல் ஒரு சிறிய நம்பிக்கை வைத்துருக்கும்
ஒரு சராசரி தமிழன்
- உமா சங்கர்-

Post a Comment