ரி.எம்.வி.பியிலிருந்து கருணா நீக்கப்பட்டாரா?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டார் என்று வெளியான செய்திகள் தொடர்பாக கருணா விளக்கம் அறித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் தாமே என்றும் அக்கட்சி தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கி வருகிறது என்றும் கருணா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்குத் தனியான பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என்று கருணா கூறியமைக்காக அவர் கட்சியின் தலைமைத்துவப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இராணுவப் பிரிவுக்கு மட்டும் தலைவராக நியமிக்கப்பட்டார் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானாவை மேற்கோள்காட்டி நேற்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.
மேற்படி செய்திக்கே கருணா மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் இனிய பாரதியும் கருணா தலைமைத்துவப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று வெளியாகிய செய்தியை மறுத்துள்ளார்.
தமது கட்சி சிறந்த எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் நிலையில் அப்பயணத்தைத் தடுக்கும் நோக்கிலான சதித்திட்டமே இந்தச் செய்தியென்று அவர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியில் தற்போது ஆயுதப் பிரிவொன்று இல்லை என்று கூறிய கருணா, இந்த நிலையில் தான் எப்படி ஆயுதப் பிரவுக்குத் தலைவராக நியமிக்கப்பட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திற்குத் தனியான பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என்று கருணா கூறியமையைக் கண்டித்து மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
Uthayan
0 விமர்சனங்கள்:
Post a Comment