பெண்களுக்காக ஒரு கார் - ஈரானில் அறிமுகம்
முழுக்க முழுக்க பெண்களுக்காகவே ஈரானில் ஒரு கார் தயாரிக்கப்பட்டு உள்ளது. அரசு நிறுவனமான ஈரான் ஹோத்ரோ இதை தயாரித்து உள்ளது.
பெண்கள் மிக எளிதில் ஓட்டும் வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் டயர்களை மாற்றுவது மிக எளிது. எலக்ட்ரானிக் பார்க்கிங் சாதனம் உள்ளது. அது போக மிக மென்மையான, பெண்கள் விரும்பும் வண்ணங்களில் இந்த கார் கிடைக்கும். காரின் உள்ளே வேலைப்பாடுகளும் பெண்களை கவரும் விதத்தில் உள்ளன.
டயர்கள் தேய்மானமடையும்போது, இந்த காரில் எச்சரிக்கை மணி ஒலிக்கும். தானாகவே இயங்கும் கியர் பாக்ஸ் உள்ளது. ஓரிடத்துக்குச் செல்ல வழிகாட்டும் வசதி, குழந்தைகளுக்கு ஆடியோ, வீடியோ பொழுதுபோக்கு அம்சங்கள் என வசதிகள் அதிகம்.
ஈரானில் சமூக கட்டுப்பாடுகள் அதிகம். அங்கு இப்போது கார் ஓட்டத் தெரிந்த பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். ஆகவே கட்டுப்பாடுகளை பின்பற்றும் அதே நேரத்தில், பெண்கள் கார் ஓட்டுவது ஊக்குவிக்க இந்த கார் அறிமுகமாகிறது.
`` பெண்களின் தேவைகள், ஆண்களின் தேவைகளில் இருந்து மாறுபட்டவை. ஷாப்பிங் செல்வது, குழந்தைகளை உடன் கூட்டிச் செல்வது என அவர்களது தேவைகள் வேறு. அதையெல்லாம் யோசித்துதான், பெண்களுக்காகவே இந்த கார் தயாராகியுள்ளது’’ என ஈரான் ஹோத்ரோ£ நிறுவன நிர்வாக இயக்குநர் வாத் நஜாபி தெரிவித்தார்.
ஏற்கெனவே ஈரானில் பெண்களுக்காக மட்டும், பெண் டிரைவர்களே ஓட்டும் டாக்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில், பெண்களின் கால்களையும் உடலையும் மறைக்கும் விதத்தில் சைக்கிள்கள் தயாரிக்க அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment