பெங்களூரில் வருகிறது அரை கிலோ மீட்டர் உயரத்தில் கட்டிடம்
பெங்களூர், அக். 10: பெங்களூரில் 560 மீட்டர் உயரத்துக்கு கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. சுதந்திர பூங்கா வளாகத்தில் இது கட்டப்பட உள்ளது.
உலகின் மிக உயர்ந்த கட்டிடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். பழைய சென்ட்ரல் ஜெயில் இருந்த இடத்தில்தான் சுதந்திர பூங்கா உள்ளது. இங்குதான் இந¢த பிரமாண்ட வளாகத்தை உருவாக்க பெங்களூர் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. கட்டிடத்தை ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் கட்டி, நிர்வகித்து, பராமரித்து, பின் அரசிடமே ஒப்படைக்கும்.
இந்த கட்டிடம் 560 மீட்டர் உயரத்துக்கு இருக்கும். இதில் 350வது மீட்டர் உயரத்தில் சுழலும் உணவகம் அமைக்கப்படும். 150 பேர¢ இதில் அமரலாம். 355வது மீட்டர் உயரத்தில், ஒரு வளாகம் இருக்கும். அதில் இருந்து வெளியே நகரை பார்வையிடலாம். 250 பேருக்கு இங்கு இடம் இருக்கும்.
360வது மீட்டரில் ஒரு திருமண மண்டபம் இருக்கும். அதற்கு மேல் போலீஸ், தபால் துறை, தொலைத்தொடர்பு துறை சாதனங்கள் பொருத்தப்படும். 460வது மீட்டரில் டிவி, எப்எம் ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள் பொருத்தப்படும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment