கலக்குகிறது கடன் சாக்லெட்
லண்டன், அக். 10: கடன் நெருக்கடி தெரியும். கடன் நெருக்கடி சாக்லெட் தெரியுமா?
கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் வாட்டி வதைக்கிறது. பல பெரிய நிதி நிறுவனங்கள் திவாலாகி உள்ளன.
இதனால் `கடன் நெருக்கடி‘ என்ற வார்த்தைகள் இப்போதெல்லாம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இதை புத்திசாலி வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். பிரிட்டனில¢ உள்ள செல்பிரிட்ஜ் என்ற சூப்பர் மார்க்கெட், புதிய சாக்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் `கிரடிட் கிரன்ச்‘. கடன் சந்தையில் இப்போது உள்ள பிரச்னையை ஞாபகப்படுத்தும் விதத்தில் இதற்கு இப்படி பெயர் வைத்து உள்ளனராம்.
இந்த சாக்லெட்டை உணவு நிபுணர் லாரா சான்டின் உதவியுடன் சாக்லெட் சொசைட்டி தயாரித்துள்ளது. அவற்றை செல்பிரிட்ஜ் கடை விற்பனை செய்கிறது. 150 கிராம் சாக்லெட்டின் விலை ரூ.348.
“இப்போதைய நிதி நெருக்கடியில் பணத்தை சிக்கனமாக செலவு செய்யவே அனைவரும் விரும்புவார்கள் என்ற போதும் கூட, தரமானதை வாங்கவே செய்வார்கள்‘‘ என்கிறார் செல்பிரிட்ஜ் கடை இயக்குநர் ஈவான் வென்டர்ஸ்.
0 விமர்சனங்கள்:
Post a Comment