இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழர் பகுதிகளை மீட்க வேண்டும்
ஈ.தே.ஜ.வி.மு.தலைவர் ஞானசேகரன்
தமிழர் பகுதிகளை மீட்க, இந்திய படையை இலங்கைக்கு அனு ப்ப வேண்டும் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக் கட்சித் தலைவர் ஞா.ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இலங்கையில் நடைபெறும் சிங்களவர்களின் கொடுங்கோல் ஆட்சியால் அவதியுறும் ஈழத் தமிழர்களின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து இந்தியா எங்கள் இனத்துக்கு கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறோம். புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், வன்னியில் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் உடுத்திய உடையுடன், நிரந்தர குடியிருப்புகளைவிட்டு, புதர்களில் தங்கி, உணவு, மருத்துவ வசதிகள் இன்றி அனாதைகளாக தவித்து வருகின்றனர். தற்போது தமிழர்கள் தனி நாடு ஒன்றில் வாழ்வதுதான் பாதுகாப்பானது.
அதைத் தவிர்த்து இடைக்காலத் தீர்வு என்றால் அது இந்தி யாஇலங்கை ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதே ஆகும். இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வான தமிழ் ஈழம் எட்டும் வரையில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியப் படைகளை அனுப்பி தமிழர் பகுதிகளை மீட்க வேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment