நாய்களின் மூலம் சிகிச்சை
மும்பையில் சமீபத்தில் நம்பமுடியாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. பிரமோதினி என்ற ஒரு சிறுமி நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தாள். சிறுவயதில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் ஊமையாயிருந்த அவளைப் பேச வைக்க மருத்துமனையில் பல முறை பல விதங்களில் முயற்சி செய்யப்பட்டும் பலனில்லை, இறுதியில் ப்ரூனோ என்ற ஒரு பயிற்சியளிக்கப்பட்ட நாய்க்குட்டியை அவளிடம் தினமும் விளையாடச் செய்து அவளைப் பேசவைக்க ஒரு நூதன ?றையைக் கையாண்டு பார்த்தனர். தினமும் அந்தச் சிறுமி ப்ரூனோவுடன் பந்து விளையாட ஆரம்பித்தாள், சில நாட்களில் அந்த நாய்க்குட்டி அவளை முதன் முதலாக பந்து என்ற வார்த்தையை பேச வைத்து விட்டது, சிறுமியுடன் மிகவும் அன்புடன் ப்ரூனோ பழகி விளையாடியதால், அவளுக்கு அந்த நாய்க்குட்டியுடன் பேசவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, அது நாளடைவில் பலனடைந்தது. மேலும் சில மாதங்களில் அவள் பேசவே ஆரம்பித்து விடுவாள் என்று நம்பலாம்.
நாய்களினால் நோயைக் குணப்படுத்த முடியும் என்று முதலில் கண்டுபிடித்தவர் இலைன் ஸ்மித் என்ற ஆங்கிலேய நர்ஸ்! இங்கிலாந்தில் அவர் ஒரு மருத்துவமனையில் பணியாற்றுகையில், அங்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த ஒரு வளர்ப்பு நாய் நோயாளிகளுடன் மிகவும் பி?யத்துடன் பழகுவதையும், அதனால் அவர்களுடைய நோய் விரைவாக குணமாவதையும் கண்ட அந்த நர்ஸ் வியப்படைந்தார். நோயாளிகளின் மடியில் படுத்துக்கொண்டு அவர்களோடு கொஞ்சி அவர்கள் முகத்தை நாக்கினால் நக்கிக் கொடுத்தும் அந்த நாய் அவர்களிடம் பழகிய விதத்திலேயே நோயாளிகள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். நோயாளிகளின் மனத்தில் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சிப் புனல் அவர்களை விரைவில் குணமாக்கும் அற்புதத்தை கண்ட ஸ்மித், தன் வேலையை விட்டு விட்டு, நாய்களுக்கு நோயாளிகளுடன் பிரியத்துடன் பழகும் விதத்தில் பயிற்சி அளித்து, புதிய சிகிச்சை முறையை உண்டாக்கினார். இன்று மேல் நாடுகளில் நாய்களின் மூலம் சிகிச்சையளிப்பது பெருகி வருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment