தமிழ் மக்களை பாதுகாக்க இந்திய மத்திய அரசு தலையிடா விட்டால் தமிழகம் தனி நாடாகும்
இலங்கைத் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கும் யுத்தத்தை நிறுத்தவும் இந்திய மத்திய அரசு தலையிடாவிட்டால் "தமிழகம்'' தனி நாடாகும் பயங்கர நிலை ஏற்படும்.
தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டங்களை முழுமையாக அங்கீகரிக்கின்றோம் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக சமல் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழ் மக்களின் போராட்டம் இன்று உத்வேகம் அடைந்துள்ளது.
இங்கு தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் உரிமைகள் மறுக்கப்பவதையும் எதிர்த்து தமிழ் நாட்டில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உண்மையில் தமிழகக் கட்சிகளின் ஒற்றுமை வரவேற்புக்குரியதாகும்.
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் படையினரின் உதவியையும் வழங்கி தமிழர் கொலைகளுக்கு துணைபோனது.
இன்று தமிழ் நாட்டின் எழுச்சியால் இவையனைத்தையும் நிறுத்த வேண்டிய நிலை மத்திய அரசாங்கத்திற்கு உருவாகியுள்ளது.
எனவே, தமிழ் மக்களை பாதுகாத்து யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை காண மத்திய அரசாங்கம் தலையிடாவிட்டால் இந்திய மத்திய அரசாங்கம் ஆட்டம் காண்பது மட்டுமல்லாது தமிழகம் தனி நாடாக பிரகடனப்படுத்தப்படும் அபாயமும் நிலவுகின்றது.
கம்யூனிஸ்ட்கட்சி ஆரம்பித்த தமிழ் மக்களுக்கான போராட்டம் தொடர் போராட்டங்களாக மாறியுள்ளன.
அரசியல் வாதிகள், கலைஞர்க மாணவர்களென தொடர்கின்றது.
எனவே, அரசாங்கம் தொடர்ந்தும் யுத்தத்தால் பிரச்சினையை தீர்க்க முயலாது சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க வேண்டும்.
வன்னியிலுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வர மறுக்கின்றனர்.
இறந்தாலும் வன்னியிலேயே தங்கத் தீர்மானித்துள்ளனர்.
எனவே, வன்னித் தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது.
உடனடியாக யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும் சமல் ஜெயநித்தி தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment