பிரபல பாடகி மாதங்கி அருள்பிரகாசம் (M:I:A) கர்ப்பம்
ஈழத்தமிழரான பிரிட்டனில் வசிக்கும் உலகின் பிரபலமான ஆங்கில பாடகியான M:I:A என்ற பெயரில் மேற்கத்தைய இசை ரசிகர்களால் அறியப்பட்ட மாதங்கி அருள்பிரகாசம் தற்போது கருவுற்றுள்ளார் என்று மேற்குலக பத்திரிகைச்செய்திகள் தெரிவிக்கின்றன. 31 வயதான மாதங்கி நியூயோர்க் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் தான் கருவுற்றிருப்பதை ரசிகர்கள் முன்னிலையில் உறுதி செய்தார். தனக்கு இரட்டை குழந்தைகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக மாதங்கி அருள்பிரகாசம் தெரிவித்தார்.
பல பிரபலமான அல்பங்களை உருவாக்கி மேற்குலகில் இசை ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மாதங்கி அருள்பிரகாசம் ஈரோஸ் ஈழப்போராட்ட இயக்கமான ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர் அவர்களின் மகளாவார்.
உச்சத்ஸ்தாயில் அமைந்த பாடல்களை மிகவும் திறமையாக பாடியுள்ள இவர தனது தந்தை பெயரில் “அருளர்” என்ற அல்பத்தையும் தாய் பெயரில் “கலா” என்ற அல்பத்தையும் உருவாக்கியுள்ளதுடன் மேலும் பல பிரபல்யமான அல்பங்களை உருவாக்கியுள்ளார்.
இவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அண்மையில் சிங்கள பாடகர் ஒருவரால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நியூயோர்க்கில் தங்கியுள்ள இவர் மேலும் பல பிரபல்யமான அல்பங்களை உருவாக்கி எதிர்காலத்தில் இசை ரசிகர்களில் பாராட்டுகளை பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment