ஒபமாவுக்காக விமானநிலையத்தை விரிவுபடுத்த கென்யா நடவடிக்கை
அமெரிக்க ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபமா எதிர்வரும் நவம்பர் மாத தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்ற நிலையில், அவருக்காக கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள விமான நிலையத்தை விசாலப்படுத்த அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒபமாவின் தந்தை கென்யாவின் நயன்ஸா மாகாணத்தில் பிறந்தவராவார். இந்நிலையில் ஒபமா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு அந்நாட்டுக்கு வருகை தர விரும்பக் கூடும் என்ற நிலையிலேயே, உள்ளூர் கிஸுமு விமான நிலையத்தை விஸ்தரிக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஒபமா ஒருபோதும் கென்யாவில் வசிக்கவில்லை.
3 தடவைகள் மட்டுமே அவர் அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.
கிஸுமுவிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் ஒபமாவின் தந்தையின் கிராமமான அலெகோ - கொகெல்லோ உள்ளது.
மேற்படி விமான நிலைய விஸ்தரிப்பு திட்டமானது எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜூலைக்குள் பூர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் சிராயு மவாக்வேர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment