கருத்தடை (சில உண்மைகள்)
கருத்தடை என்று சிலர் மாத்திரை சாப்பிடுகின்றனர். சிலர் ஊசி போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சிலரோ, எமர்ஜென்சி கருத்தடை முறையை கையாள்கின்றனர். இதெல்லாம் சரியா? உடலுக்கு நல்லதா? ஆனால், இப்படி கருத்தடை செய்து கொள்வோர் சரியான தகவல் தெரியாமல் தவறான வழியை பின்பற்றுகின்றனர்.
கருத்தடை விஷயத்தில் எண்ணற்ற கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றை அறியாமல் செயல்படுத்தி கடைசியில் அவஸ்தைபடுகின்றனர்.
இதோ அந்த சந்தேகங்களை போக்க சில உண்மைகள்.
· கருத்தரித்த பின் "பாதுகாப்பான நாட்களுக்குள்' செக்ஸ் உறவு வைப்பது சரியே. இதனால், எந்த பிரச்சினையும் வராது'' என்பது கட்டுக்கதை.
உண்மை கருத்தரித்த பின்னர் செக்ஸ் உறவு வைக்காமல் இருப்பதுதான் நல்லது.
பெண்களின் உடல் நிலையைப் பொறுத்து அவரவர் உடல் திடத்தின் அடிப்படையில்தான் முழு கருத்தரிப்பு ஏற்படுகிறது. அதனால், உடல் பலவீனப்பட்ட நிலையில், செக்ஸ் உறவு வைக்கப் போய் கருவுக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது.
· "காண்டம்' பயன்படுத்தினால் கருத்தரிக்க வாய்ப்பு நூறு சதவீதம் இல்லை.
இதுவும் முழுமையாக உண்மை என்று சொல்ல முடியாது. அதே சமயம் கட்டுக்கதை என்று ஒட்டு மொத்தமாகவும் சொல்லிவிட முடியாது.
"காண்டம்' என்பது உண்மையில் 100 சதவீதம் கருத்தடை பாதுகாப்பு தருவதுதான். ஆனால், அதை பயன்படுத்துவதில் உள்ள தவறால் அதன் பாதுகாப்புத் தன்மையிலும் உறுதித்தன்மை குறைகிறது. முறையாக அணிந்து கொண்டபின் உடலுறவு கொண்டால் 100 சதவீத பாதுகாப்பு தான்.
· கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், குண்டாகி விடுவார்கள் இது முழுக்க முழுக்க கட்டுக்கதை என்று சொல்லிவிட முடியாது.
சில பெண்களுக்கு இப்படி நேரலாம். சிலருக்கு எடை குறைவதும் ஏற்படுகிறது. எடை கூடுபவர்கள் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால், அவர்களுக்கு மீண்டும் எடை குறைய ஆரம்பிக்கும்.
· கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தவுடன் பலன் தெரியும். இது கட்டுக்கதை.
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததும் அதன் பலன் உடனே தெரியாது.
பெண்களுக்கு இயற்கையாக சுரக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துவதில்தான் அதன் பலன் இருக்கிறது. இதற்கு ஒரு மாதம் தேவைப்படும்.
எனினும், கூடுதல் பாதுகாப்பு எடுத்துக் கொள்வது நல்லது என்பதுதான் சரி.
· கருத்தடை மாத்திரைகள் புற்றுநோயை உருவாக்கும். இது வெறும் கட்டுக்கதைதான்.
புற்றுநோய்க்கும் கருத்தடை மாத்திரைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த மருத்துவ உண்மையும் இல்லை.
ஆனாலும், மார்பக புற்றுநோய் என்பது செக்ஸ் சுரப்பிகள் சம்பந்தப்பட்டது. எனினும், மாத்திரையால்தான் புற்றுநோய் வருகிறது என்பதில் உண்மை இல்லை.
· கருத்தடை மாத்திரை சாப்பிட்டால், எய்ட்ஸ் பாதிப்பை தவிர்க்கலாம். இது முழு கட்டுக்கதை.
கருத்தடை மாத்திரை என்பது கருத்தரிப்பதை தவிர்ப்பதற்குதான். ஆனால், காண்டம் அணிந்தால்தான் எய்ட்ஸ் பாதிப்பை தடுக்கலாம்.
· ஊசி மூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்தினால், மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
இதுவும் கட்டுக்கதை தான். கருவுற்றல் என்பது இயற்கையானது. கருத்தடை செய்யலாமே தவிர, கருவுறுவதை அறவே நிறுத்திவிட ?டியாது. ஊசி மூலம் கருத்தடை மருந்தைசெலுத்திக் கொள்ளும்போது, மலட்டுத்தன்மை ஏற்படும் என்பது சரியல்ல. ஆனாலும், இப்படி மருந்தை செலுத்திக் கொண்ட பின், இரண்டு, மூன்று மாதவிடாய் காலத்துக்கு பின்னர் கருவுறுவது நல்லது.
மயூரி
0 விமர்சனங்கள்:
Post a Comment