பர்மிய நடிகருக்கு 45 வருட சிறை
நர்கீஸ் சூறாவளிக்கான பர்மிய இராணுவ அரசாங்கத்தின் உதவி நடவடிக்கைகளை விமர்சித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது தனிப்பட்ட உதவி வாகனத்தொடரணியை அனுப்பியதற்காக அந்த நாட்டின் பிரபலமான நகைச்சுவை நடிகருக்கு 45 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களினால், கடந்த இரண்டு வாரங்களில் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களில் நகைச்சுவை நடிகரான ஷர்கனரும் ஒருவராவார்.
இரண்டு வருடத்தில் தேர்தல் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினரை எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற செய்தியை இதன் மூலம் இராணுவ ஜெனரல்கள் விடுத்துள்ளதாக ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளனர்.
பிபிஸி தமிழோசை
0 விமர்சனங்கள்:
Post a Comment