இளம் தம்பதியினருக்கு முதலாவது குழந்தை மூன்று கால்களுடன் பிறந்துள்ளது
அக்கரைப்பற்றில் ஆதார வைத்தியசாலையில் இளம் தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தையொன்றே இவ்வாறு மூன்று கால்களுடன் பிறந்துள்ளது. இக்குழந்தை இவ்வாறு பிறந்துள்ளமை தொடர்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிகாரி எம்.எம் தாசின் அவர்களிடம் கேட்டபோது… குறித்த தாய்க்கு கர்ப்பம் தரிக்கப்பட்ட போது அது இரட்டைக் குழந்தைக்குரிய தோற்றப்பாட்டுடன் வளர்ந்து வந்துள்ளதாகவும் ஆனால் குறித்த சில மாதங்களின் பின்னர் இரட்டை பிள்ளைகளுக்கான வடிவம் மாறி ஒரு தனி சிசுவாக மாற்றமடைந்துள்ளதுதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே இல்லாமல் போன மற்றைய சிசுவின் கால்பகுதி தற்போது பிறந்துள்ள குழந்தையின் இரு கால்களுக்குமிடையே மேலதிகமாக வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இக்குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் விசேட சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment