காதுகள் சுத்தப்படுத்தும் குச்சிகளின் தாய்நாடு போலந்து
காதுகளை சுத்தம் செய்வதற்கு இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் பஞ்சு குச்சிகள் போலந்து நாட்டிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டுள்ளன.
1920ஆம் ஆண்டளவில் போலந்து நாட்டைச் சேர்ந்த லியோ ஜெர்ன்ஸ்டென்ஜாங் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். ஒரு நாள் அவர்களது குழந்தையின் காதை அவரது மனைவி பல்குத்தும் குச்சியொன்றில் பஞ்சை வைத்துச் சுத்தம் செய்ய முயல்வதை லியோ கண்டார். இதனால் குழந்தையின் காது சேதமடைந்து விடும் என எண்ணிய அவர் எளிமையான முறையில் பாதுகாப்பாக குழந்தையின் காதை சுத்தம் செய்வதற்கான வழியை சிந்தித்தார்.
குறைகளற்ற காது குச்சியை உருவாக்க லியோ வுக்குப் பல ஆண்டுகள் பிடித்தன.
இதற்கு மரக்குச்சிகளைப் பயன்படுத்தினால் அவை உடையக்கூடும் என்று லியோ கருதியதால் கார்ட்போர்டில் தயாரிக்கப் பட்ட குச்சிகளைப் பயன்படுத்தினார். பஞ்சு உதிர்ந்து காதுக்குள் விழுந்துவிடாமல் இருக்க அதை குச்சியில் ஒட்டவைப்பதற்கு வழிகாண வேண்டியிருந்தது.
1926ஆம் ஆண்டில் இறுதி வடிவம் பெற்ற தனது காது குச்சிகளை விற்பனை செய்வதற்காக இன்பேன்ட் நாவல்டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் லியோ. ஆனால் தனது காது குச்சிகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று லியோவுக்குத் தெரியவில்லை. ஈற்றில் பேபி கேஸ் என்று பெயரிட்டார்.
பின்னர் அப்பெயர் கவர்ச்சி கரமானதாக இல்லாததால் அதற்கு கியூடிப்ஸ் பேபி கேஸ் என பெயர் மாற்றம் செய்தார். கடைசியாக கியூடிப்ஸ் என்பது மட்டும் எஞ்சியது.
இன்று கியூடிப்ஸ்கள் காதுகளை மட்டுமல்ல, நுணுக்கமான உபகரணங்களையும், காயங்களையும் சுத்தம் செய்யவும், மருந்திடவும் கூட பயன்படுத்தப்படுகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment