நவீன உலகின் பழங்கால மனிதர்கள்
நாள்தோறும் புதிது புதிதாகத் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. இவ்விஞ்ஞான உலகில் வெளியுலகையே அறியாத, பழங்கால வாழ்க்கை முறையும் இன்னும் தொடர்ந்து வருகின்றது.
இவ்வாறான பழங்குடி இனத்தவர்கள் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளை வேட்டையாடியே தங்களது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். அதற்கு அவர்கள் கற்காலத்தைச் சேர்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் ஏனைய பகுதி மக்களுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்பின்றித் துண்டிக்கப்பட்டிருப்பது தான் இந்நிலைக்குக் காரணம். இவர்கள் தமது தீவுகளை விட்டு வெளியேறி ஏனைய மக்களுடன் தொடர்புகொள்வதில்லை. தவறுதலாக இத்தீவுகளிற்கு வெளிநபர்கள் எவரேனும் பிரவேசித்து விட்டால் அங்குள்ள ஆதிவாசிகள் தம் எதிர்ப்பை காட்டி அவர்களை விரட்டியடித்து விடுவார்கள்.
அந்தமான் பழங்குடி இனத்தவர்களிலேயே மிகவும் பழமையானவர்கள் அந்தமான் சிறு தீவில் வசிக்கும் ஓங்கே இன மக்களாவர். இந்த இனத்தைச் சேர்ந்த 105 பேர் தான் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள்.
அந்தமான் பழங்குடி இனத்தவர்களில் ஜாரவாக்களும் சென்டினீல்ஸும் மிகவும் ஆக்ரோஷமானவர்கள். வெளிநபர்கள் தங்கள் கண்ணில் பட்டாலே தாக்கத் தொடங்கி விடுவார்கள். பொதுவாக இவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வசிக்காமல் அலைந்து தி?ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் சிலர் கிடைத்த மரம், மட்டைகளைக் கொண்டு அரை குறையாக வீடு கட்டிக்கொள்வது உண்டு. இவர்கள் முறையாக ஆடை அணிவதும் இல்லை. ஜாரவாக்கள் வேட்டைக்காக வில்அம்பைப் பயன்படுத்துகிறார்கள்.
கடற்கரைப் பகுதியில் தாங்கள் கண்டுபிடிக்கும் இரும்புத் துண்டுகளைக் கொண்டு அம்பின் நுனியை உருவாக்குகிறார்கள். நிகோபர் தீவுகளின் ஷோம்பன் பழங்குடி மக்கள் நட்புணர்வு கொண்டவர்கள்.
இவர்கள் நாகரிக மக்களுடன் தொடர்புகொண்டு சில வசதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment