விநோத மனிதர்கள்
நெல்லை மாவட்டம் வெள்ளான்குளத்தில், குறித்ததோர் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் குரங்கைப் போன்ற தோற்றத்தையும் நடத்தையையும் கொண்டு காணப்படுகின்றனர். இவர்களது தந்தை நம்பி இளவயதில் குரங்குகளிரண்டை துன்புறுத்திக் கொன்றதனால் ஏற்பட்ட அனுமார் சாபமே சகோதரர்களின் அசாதாரண நிலைக்கு காரணம் என ஊர் மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளான்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் ஆறுமுகம் ஆகிய சகோதரர்களே இவ்வாறான விநோதத் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றனர். இவர்களது தந்தை நம்பியும், தாய் பார்வதியம்மாளும் இறந்து விட்டனர்.
கடைசி தங்கை மாரியம்மாளும், அவரது கணவர் பொன்னையாவுமே பல கஷ்டங்களின் மத்தியிலும் இவர்களைக் கவனித்து வருகின்றனர்.
இவர்களை நேரில் சென்று பார்வையிட்ட செய்தியாளர்கள் தெரிவிப்பதாவது, அண்ணன் பெருமாளும் தம்பி ஆறுமுகமும் 40 வயதை கடந்து விட்டனர். எனினும் இருவருமே மனவளர்ச்சி குன்றியவர்கள்.
இவர்களின் முகம் 4 1/2 அடி உயரத்தில் சற்று கூன் போட்ட முதுகுடன் கூடிய உடலுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் காணப்படுகின்றது. பொருட்களை கொடுக்கும்போது வெடுக்கென குரங்கு போன்று பறிப்பார்கள்.
ஒரு சில செயல்களை மட்டுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
தம்பி ஆறுமுகத்திற்கு பேசுவது எதுவும் புரியாது.
யாராவது பிஸ்கட் அல்லது மிட்டாயை காட்டிவிட்டால் குதிபோட்டு ஓடி அதை லபக் என்று பிடித்துக் கொள்வார் ஆறுமுகம். கோபம் வந்தால் பிராண்டி கடித்து குதறி விடுவார்.
பெருமாள் மூத்தவர் என்பதாலோ என்னவோ சற்று பேசுகிறார். நாம் செய்யும் செயலை அப்படியே செய்கிறார்.
இவர்களது உலகமே வெள்ளான்குளத்தில் உள்ள 4 தெருக்களும், ஆடு மேய்க்கும் காடுகளும் தான்.
வீதிகளில் அலைந்து திரிந்து பிறர் கொடுப்பதை வாங்கி உண்ணும் இவ்விநோத மனிதர்களின் பின்னணியில் அனுமார் சாபம் என்ற கதை ஒன்று கூறப்படுகிறது.
இவர்களது தந்தை நம்பி , இளம் வயதில் ஏராளமான ஆடுகள் வளர்த்து ஊர் ஊராக சென்று ஆடு மேய்த்து வருவாராம்.
அதேபோன்று கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆடு மேய்க்கச் சென்ற போது அவர் சாப்பிட வைத்திருந்த பழைய கஞ்சி சோற்றை இரண்டு குரங்குகள் வந்து சாப்பிட்டு விட்டன.
ஓரிரு நாட்கள் அல்ல ,இவ்வாறு பல தடவைகள் இடம்பெற்று விட்டன. பட்டினியாக இருந்த நம்பிக்கு கோபம் வந்துவிட்டது. அக்குரங்குகளை கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் உணவில் கருக்கு மட்டை துண்டுகளையும் மிளகாய் தூளையும் போட்டு வைத்து விட்டார்.
வழக்கம் போல் சாப்பிட வந்த குரங்குகள் சாப்பாட்டை அள்ளி உண்டபோது கருக்கு மட்டை துண்டால் வாய் கிழிந்து இரத்தம் சிந்தியது. சாப்பாட்டில் உள்ள மிளகாய் தூள் காயத்தில் பட்டு குரங்குகளுக்கு தாங்கொணா வேதனை கொடுத்தது. இதை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்த நம்பி ஓடோடி வந்து கருக்கு மட்டையால் குரங்குகளை அடித்து இரத்தகளறியாக்கினார். தப்பி ஓடிய இரண்டு குரங்குகளும் அணு அணுவாக துடித்து 2 நாட்கள் கழித்து இறந்து விட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நம்பிக்கு திருமணாகி முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை குரங்கு உருவில் இருந்தது.
இதனால் அன்போடு குழந்தையை அணைத்து பாலூட்ட வேண்டிய தாய் பார்வதி அம்மாள் பயந்து போய் குழந்தைக்கு பாலூட்டவேயில்லை. சில தினங்களில் குழந்தை இறந்து விட்டது.
அதன் பின்னர் 2 மகன்களும், 1 மகளும் பிறந்தனர். அவர்களும் குரங்குகள் போன்றே இருந்து பின்னர் சிறு வயதிலேயே இறந்தனர்.
இதனால் நம்பியும், பார்வதியும் பல கோயில்களுக்கு சென்று விரதம் இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது உயிரோடு இருக்கும் பெருமாளும், அவரது தம்பி ஆறு?கமும் குரங்கு போல் பிறந்து உயிரோடு உள்ளனர்.
குழந்தைகள் அனைத்தும் குரங்குபோல் பிறந்ததால் இது அனுமார் சாபம் என்று கூறியுள்ளனர்.
இதைப் போக்க ஏற்கனவே சித்திரவதை செய்த குரங்குகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி குரங்கு உருவம் செய்து அனுமான் கோவிலில் வைக்க வேண்டும் என ஒரு சாத்திரக்காரர் கூறியுள்ளார்.
அதனை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
அதன்பிறகு நம்பிக்கும், பார்வதிக்கும் 3 பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த 3 பேரும் சாதாரண குழந்தைகளை போலவே பிறந்துள்ளனர். தற்போது உலகம்மாள், செண்டு ஆகிய இரு பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
மாரியம்மாள் என்ற கடைசி தங்கை அண்னன்களை பராமரித்து வருகிறார்.
சரியாக உண்ண உணவு இல்லாமலும், உடுத்த இல்லாமல் ஆறுமுகமும், பெருமாளும் அவதிப்படுவதை பார்த்து அங்கு வந்தவர் ஒரு 100 ரூபாயை பெருமாள் கையில் கொடுத்தார்.
அதை வாங்கி பத்திரப்படுத்திய பெருமாள் தம்பிக்கு சட்டை வாங்கி கொடுக்கனும் என்று அரைகுறை தமிழில் கூறியது அனைவரது கண்களையும் கண்ணீர் கசிய வைத்தது.
இவர்களுக்கு மாதம் 700 ரூபா உதவித் தொகை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment