சாரதி இல்லாமலே நீதிபதியின் வாசஸ்தலத்திற்கு சென்ற பஸ்
எரிபொருள் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்று சாரதி இல்லாமல் பிரதான வீதியில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, நீதிபதியின் வாசஸ்தலத்திற்கு சென்று மதிலை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அவ்வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை அச்சத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்க வைத்துள்ளது.
பதுளை பிரதான எ?பொருள் நிலையமொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸே வீதியில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி பதுளை மாவட்ட நீதிபதியின் வாசஸ்தலத்திற்கான மதிலை உடைத்துக் கொண்டு நின்றது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது; சாரதி ஒருவர் தான் செலுத்தி வந்த பஸ்ஸை பதுளை பிரதான எ?பொருள் நிலையமொன்றின் அருகே நிறுத்திவிட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தின் பின் சாரதியின்றி தானாகவே இயங்க தொடங்கிய பஸ் வீதியின் குறுக்கும் நெடுக்குமாக சென்றுள்ளது. இதனை அவதானித்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடத்தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்ஸை நிறுத்துவதற்கு யாரும் முன்வராமையினால் அந்த பஸ் பதுளை மாவட்ட நீதிபதியின் வாசஸ்தலத்திற்கான மதிலை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியது. பஸ் மதிலை மோதி விபத்துக்குள்ளான போது நீதிபதி தனது வாசஸ்தலத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது மேற்படி பஸ்ஸின் சாரதி தேநீர் அருந்துவதற்காக சென்றிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment