குழந்தை மூச்சுக்குழாயில் சிக்கிய சட்டைப் "பின்'
குழந்தையின் மூச்சுக்குழாயில் எட்டு நாட்களாக சிக்கி பாதிப்பை ஏற்படுத்திய சட்டைப்பின்னை ("சேப்டிபின்') மதுரை அரசு டாக்டர்கள்,"லேப்ராஸ்கோபிக்' சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சோலை மலையின் குழந்தை லாசரஸ், எட்டு நாட்களுக்கு முன், சட்டைப்பின்னை ' விழுங்கினான். இதை யாரும் கவனிக்க வில்லை. அன்றிரவு மூச்சுவிட முடியாமல் தவித்த குழந்தைக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டது.
கடந்த 24ஆம் திகதி விருதுநகர் டாக்டரிடம் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். "எக்ஸ்ரே' எடுத்து பார்த்ததில் மூச்சுக்குழாயில் சட்டைப்பின் அடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. மறுநாள் 25ஆம் திகதி மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப் பட்டது.
காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைவர் டாக்டர் கே.ஆர். கண்ணப்பன், மயக்கவியல் துறைத் தலைவர் ராஜமனோகரன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் 3 மணி நேரம் போராடி"லேப்ராஸ்கோபிக்' சிகிச்சை மூலம் சட்டைப் பின்னைஅகற்றினர்.
சிவக்குமார் கூறுகையில், "மூச்சுகுழாய் பாதிப்பிற்காக எட்டு மாத குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது இதுதான் முதன்முறை. சட்டைப்பின் இடைவெளி இருந்ததால் குழந்தையால் மூச்சுவிட முடிந்தது.
இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சிகிச்சை அளித்தோம்' என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment