உலகின் வயதான பெண்மணி மரணம்
Edna Scott Parker(April 20, 1893 – November 26, 2008)
உலகின் மிகவும் வயதான எட்னா பார்க்கர் (Edna Scott Parker) எனும் பெண்மணி தனது 115 ஆவது வயதில் அமெரிக்காவில் மரணமானார். அமெரிக்க இந்தியானா மாநிலத்தைச் சேர்ந்த எட்னா பார்க்கர், 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிறந்தவர்.
皆川 ヨ子, Minagawa Yone (January 4, 1893 – August 13, 2007)
கடந்த ஆண்டு அவரை விட வயதில் 4 மாதங்கள் மூத்தவரான ஜப்பானைச் சேர்ந்த யோன் மினாகவா (Yone Minagawa) மரணமடைந்ததையடுத்து உலகின் வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எட்னா பாக்கர் இடம்பிடித்தார்.
1939 ஆம் ஆண்டு தனது கணவரான ஏர்ல் பார்க்கர் மரணமடைந்தது முதற்கொண்டு தனது 100 வயது வரை தனது பண்ணை இல்லத்தில் தனிமையில் வாழ்ந்த எட்னா பார்க்கர், பின்னர் தனது மகனொருவரின் வீட்டில் சிறிது காலம் வாழ்ந்ததாகவும், தொடர்ந்து தனது எஞ்சிய காலத்தை ஷெல்பைவிக்லே பராமரிப்பு இல்லத்தில் கழித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எட்னா பார்க்கருக்கு இரு மகன்களும், 5 பேரப்பிள்ளைகளும் 13 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர். முன்னாள் ஆசிரியையான இவர் பட்டப்படிப்பு கல்வித் தகைமையுடைய உலகின் வயதானவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment