இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாமா?
தனது மைத்துனி மீதிருந்த அளவு கடந்த காதல் பித்தால் மைத்துனியின் சடலத்துடன் உயிருடன் தன்னைத் தானே புதைத்துக் கொண்ட மருத்துவர் ஒருவர், பொலிஸாரால் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவரின் விசித்திர நடவடிக்கை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், புதையுண்ட நிலையில் மயங்கிக் கிடந்த அவரை மீட்டெடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இர்பான் ஷெய்க் என்ற இந்த மருத்துவர் தனது மைத்துனியை உயிருக்குயிராக நேசித்ததாகவும் ஆனால் மைத்துனி வேறொருவரை திருமணம் செய்யவும் அவர் பிரமச்சாரியாக வாழத் தீர்மானித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரு நாட்களுக்கு முன் மைத்துனி மரணம டையவும் மனமுடைந்த இர்பான் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
உடனே அவர் மயானத்துக்குச் சென்று தனது அன்புக்குரிய மைத்துனியின் சமா தியைத் தோண்டியுள்ளார்.
தொடர்ந்து மயக்க மாத்திரைகளை விழுங்கிய அவர், தனது மைத்துனியின் சடலத்தின் அருகே தன்னைத் தானே புதைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று நீண்ட நேரம் கழித்தே, இது தொடர்பில் பிரதேசவாசிகளுக்கு தெ?யவந்துள்ளது.
சமாதி புதிதாகத் தோண்டப்பட்டுள்ளதை அவதானித்த பிரதேவாசிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்படி மருத்துவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment