இலத்திரனியல் அஞ்சல் அனுப்பும் பழக்கத்தை கைவிட வேண்டிய நிலையில் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்பு தனது புகைத்தல் பழக்கத்தை கைவிட்ட பராக் ஒபாமா, தற்போது இலத்திரனியல் அஞ்சல் பழக்கத்தை கைவிட வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து பதவி விலகிச் செல்லவுள்ள ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷோ அன்றி முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனோ தமது பதவிக் காலத்தில் இலத்திரனியல் அஞ்சலை உபயோகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பராக் ஒபாமாவோ தனது பிரசார நடவடிக்கைகளின் போது கையடக்க இலத்திரனியல் அஞ்சலை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஒபாமாவின் மகள்மார் பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் அவர் இலத்திரனியல் அஞ்சலை பார்வையிடும் காட்சியை பல புøகப்படக்காரர்களின் புகைப்படக் கருவிகள் பதிவு செய்தபோது, ஒபாமாவின் மனைவி மிச்செல் அவரின் கையில் தட்டி இலத்திரனியல் அஞ்சல் பார்வையிடும் நடவடிக்கையை நிறுத்துமாறு சமிக்ஞை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலேயே இலத்திரனியல் அஞ்சலை உபயோகிக்கும் முதலாவது ஜனாதிபதியாக ஒபாமா இருப்பதாக கிளின்டனின் முன்னாள் ஊடக செயலாளர் ஜோ லொக்ஹார்ட் விமர்சித்துள்ளார். அத்துடன் தனது அலுவலகத்தில் "லப்டொப்' கணினியை உபயோகிக்கும் முதலாவது ஜனாதிபதியாகவும் ஒபாமா விளங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி பதவிக்குரிய நிலை தொடர்பாக பொதுக் கண்ணோட்டத்தை கவனத்திற்கொண்டு, இலத்திரனியல் அஞ்சல் அனுப்பும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒபாமா தீர்மானித்துள்ளதாக அவரது உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment