பெண்மணியின் மூளையில் புழு
பெண்மணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூளைக் கட்டியை அகற்ற அறுவைச் சிகிச்சையொன்றை மேற்கொண்ட மருத்துவர்கள், மூளைக்கட்டிக்கு பதிலாக அவ்விடத்தில் புழுவொன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விசித்திர சம்பவம் அமெரிக்க அரிஸோனா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ரோஸ்மேரி அல்வாரெஸ் என்ற மேற்படி பெண்மணி, கைகளில் உணர்ச்சியற்ற தன்மை மற்றும் பார்வை மங்கிய நிலை என்பனவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரோஸ்மேரிக்கு மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான மருத்துவ பரிசோதனைகளின் போது, அவரது தலையில் சிறிய கட்டி போன்ற ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மூளைக் கட்டியை அகற்ற சத்திர சிகிச்சையை மேற்கொண்டபோதே மூளையின் நுண்ணிய பகுதியில் புழு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மூளையிலிருந்து புழு அகற்றப்பட்டதையடுத்து, ரோஸ்மேரி வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக இந்த சத்திர சிகிச்சையில் பங்கேற்ற நரம்பியல் நிபுணரான மருத்துவ கலாநிதி பீற்றர் நகேஜி தெரிவித்தார்.
மேற்படி புழு இனமானது அழுக்கடைந்த கைகள் மூலம் பரவுவதாக குறிப்பிட்ட மருத்துவர், இத்தகைய புழு மூளை வரை சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவை என்று கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment