தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின்போது தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் ஆர்ஜென் டீன பொலிஸ் தலைமையதிகாரியொருவர், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
துகுமன் மாகாணத்திலுள்ள தனது வீட்டின் தண்ணீர் தாங்கி மேல் நின்றபடி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மரியோ பெர்ரேரா என்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி, பொலிஸார் அவரைக் கைது செய்யவதற்கு முன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் எதுவித குற்றச்செயல்களையும் செய்யவில்லை என மரியோ பெர்ரேரா இந்த தொலைக்காட்சிப் பேட்டியின் போது வலியுறுத்தியிருந்தார்.
இறுதியாக தனது மனைவியை அழைத்த அவர், அவரை என்றென்றும் மிகவும் நேசிப்பதாக கூறிவிட்டு தனது துப்பாக்கியை எடுத்து தனது காதின் பின்புறமாக சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1976 ஆம் ஆண்டுக்கும் 1983 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இராணுவ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுடன் சம்பந்தப்பட்டிருந்ததாக மரியோ பெர்ரேரா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டி ருந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment