உறைய வைக்கப்பட்ட எலியில் கலப்பிறப்பாக்கம்
16 வருடகாலமாக உறைய வைக்கப்பட்ட எலிகளின் உடல்களிலிருந்து கலப்பிறப்பாக்கம் செய்யும் முயற்சியில் ஜப்பானிய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
உறைய வைக்கப்பட்ட நிலையில் மரபணுக்கலங்கள் சேதமடைவதால் அத்தகைய உறை நிலை கலங்களைக் கலப்பிறப்பாக்கம் செய்வது சாத்தியமில்லை என நிபுணர்கள் இதுவரை கருதியிருந்தனர்.
எனினும், ஜப்பானில் கோப் எனும் இடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆதிகால விலங்குகள் போன்றவற்றின் உறைநிலை எச்சங்களிலிருந்து அவ்விலங்குகளின் சந்ததிகளை உருவாக்குவதற்கு தம்?டைய புதிய தொழில்நுட்பம் வழிவகை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேற்படி விஞ்ஞானிகள் 20 பாகை செல்சியஸ் உறை நிலையில் பேணப்பட்ட எலியொன்றின் ?ளைக் கலங்களைப் பயன்படுத்தியே இந்தக் கலப்பிறப்பாக்கத்தை செய்துள்ளனர்.
இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 40,000 ஆண்டுகளுக்கு முந்திய காட்டு யானைகளின் உறைநிலை எச்சங்களைப் பயன்படுத்தி, அக்காட்டு யானைகளை மீண்டும் உருவாக்குவதற்கான சாத்திய?ள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment