அமெரிக்க ஆண் மீண்டும் கர்ப்பம்
அமெரிக்காவைச் சேர்ந்த தோமஸ் பீற்றி (Thomas Beatie) என்ற ஆண், இரண்டாவது தடவையாகவும் கர்ப்பமடைந்துள்ளார்.
33 வயதான மேற்படி நபர், முன்பு பெண்ணாக இருந்து பால் மாற்று சிகிச்சையின் பின் ஆணாக மாறியவராவார்.
எனினும், இந்த சிகிச்சையின் போது, அவர் தனது பெண் இன விருத்தி உறுப்புகளை அகற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட ரேசி லெகோன்டின் என்ற இயற்பெயரையுடைய தோமஸ் பீற்றி, தனது 20 வயது முதல் ஆணாக வாழ ஆரம்பித்தார்.
தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்பகப் பகுதியை அகற்றிய தோமஸ் பீற்றி, நான்ஸி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
இந் நிலையில், விந்தணுவைத் தானமாக பெற்ற பீற்றி கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தையான சூசனைப் பெற்றெடுத்தார். மேற்படி தம்பதியினரின் இரண்டாவது குழந்தை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி பிறக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment