கடுமையான அங்கவீனமடைந்த மகளை தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற தாய்
கடுமையான அங்கவீனம் காரணமாக சிரமப்பட்ட தனது மகளை தூக்கமாத்திரை கொடுத்து படுகொலை செய்த தாயொருவரை, கருணைக் கொலை என தீர்ப்பளித்து சீன நீதிமன்றமொன்று விடுதலை செய்துள்ளது.
லி ததோங் என்ற இந்தப் பெண், சுயமாக மலசலம் கழிக்கக்கூட முடியாத நிலையில் அங்கவீனமடைந்திருந்த தனது மகளை கடந்த 20 வருட காலமாக பராமரித்து வந்தார்.
இந்நிலையில் கிழக்கு சீனாவிலுள்ள தனது சொந்தக் கிராமத்திலிருந்து உதவி தேடி பீஜிங் நகருக்கு வந்த லீ ததோங், முயற்சி பயனளிக்காத நிலையில் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் வைத்து மகளுக்கு 200 தூக்க மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அதன்பின் அவரது முகத்தை துவாயால் அழுத்தி மூச்சுத்திணற வைத்து படுகொலை செய்துள்ளார்.
""எனக்கு வயதாகிவிட்டது. எனக்குப் பின் மகளை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு செய்தேன்'' என 47 வயது லி தஹோங் நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க சாட்சியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment