இந்தியா மேற்கொண்ட தீர்மானம் முட்டாள்தனமானது
இலங்கைத் தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ள நிவாரணப் பொருட்களை இந்தியத் தூதரகம் மூலம் வடபகுதிக்கு விநியோகிப்பதென இந்தியா மேற்கொண்ட தீர்மானம் முட்டாள்தனமானதென தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்
இந்தியாவின் இந்த முடிவு குறித்து ஆனந்த சங்கரி கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை அரசின் மீது இந்தியாவுக்கு உண்மையான நம்பிக்கையும் விசுவாசமுமிருந்தால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது. கடந்த இருபது வருட காலத்துக்கும் மேலாக வன்னி மக்களுக்கும் அங்குள்ள புலிகளுக்கும் இலங்கை அரசாங்கங்களே அனைத்தையும் வழங்கி வருகின்றன.
வன்னியில் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என்பது உண்மைக்குப் புறம்பானது. இதில் எவ்வித உண்மையுமில்லை. சில குறைபாடுகள் மட்டுமே அங்கு காணப்படுகின்றன.
இலங்கை இராணுவத்தினரால் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதும் பச்சைப் பொய். இங்குள்ள தமிழர்களில் 55 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சிங்கள மக்களுடன் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது எழுந்துள்ள அலையென்பது சுனாமி போன்றது. அங்கிருந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோர் வன்னிக்கு வந்து நிலைமை நேரில் பார்வையிட விரும்பாதது ஏன் எனவும் ஆனந்த சங்கரி கேள்வியெழுப்பினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment