இலங்கைத் தமிழ் இளைஞருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசித்துவந்த இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கொலைக்குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தால் ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழுவருடங்களின் முன்னர் மற்றொரு இலங்கையரான முத்துக்குமாரசாமி அரவிந்தன் (வயது25) என்பவரைக் கோடரியால் வெட்டிக் கொலைசெய்தமைக்காகவே பாலகிருஷ்ணபாரதி பாலகுருபவன்(வயது26) என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒல்ட் பைலேயிலுள்ள சிறைச்சாலையில் ஆகக்குறைந்தது 15 வருடங்களாவது சிறைவாசம் அனுபவிக்கவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 15 வருட நிறைவில் பாலகுருபவன் பாலகிருஷ்ணபாரதி விடுதலை செய்யப்படும்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இக்கொலை வழக்கு தொடர்பாக லண்டனைச் சேர்ந்த சிவகீதன் புண்ணியமூர்த்தி மற்றும் வெம்பிளியைச் சேர்ந்த செந்தமிழ் தில்லைநாதன் ஆகியோருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலகுருபவன் பாலகிருஷ்ணபாரதி உள்ளிட்ட சிலர் வெம்பிளி பகுதியில் இருந்த அரவிந்தன் முத்துக்குமாரசாமி உள்ளிட்ட ஐவரை வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தலையில் காயமடைந்திருந்த அரவிந்தன் அக்காயம் காரணமாக பின்னர் மரணமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்றம் குறிப்பிட்ட சிலரைக் கைது செய்ததுடன் அரவிந்தனைக்கொலை செய்தமைக்காகவும் ஏனைய நால்வரை கொலை செய்யமுற்பட்டமைக்காகவும் இம்மூவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாலகுருபவன் தகவல்தொழில்நுட்ப முகாமையாளராவார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment