புஷ் மீது வீசிய பாதணிகளுக்கு 130 கோடி ரூபா கொடுத்து வாங்க சவூதி செல்வந்தர் விருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மீது வீசியெறிந்த பாதணிகளை (இலங்கை நாணயப்படி) ரூபா 130 கோடி கொடுத்து வாங்கத் தான் தயாராக இருப்பதாக சவூதி அரேபிய கோடீஸ்வரர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஞாயிறன்று அமெரிக்க ஜனாதிபதி, ஈராக்கிற்கு விஜயம் செய்தபோது அங்கு ஊடகவியலாளர் மாநாடொன்றில் பங்கேற்றார்.
இச்சந்தர்ப்பத்தில் ஈராக்கிய ஊடகவியலாளர் ஒருவர் புஷ்ஷை நோக்கி கடுமையான வார்ர்த்தைகளால் பேசியபடி, தனது காலில் அணிந்திருந்த பாதணிணீகளை கழற்றி அவரை நோக்கி வீசினார்.
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஈராக்கிய நாட்டு நிருபரே இவ்வாறு பாதணிகளை புஷ் மீது வீசினார்.அதைத்தொடர்ந்து அவர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்யுமாறும், அவரே ஈராக்கின் கௌரவத்திற்குரிய பிரஜை எனவும் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து நடந்துவருகின்றன. இந்நிலையிலே, மேற்படி கோடீஸ்வரர் குறித்த பாதணியை இவ்வளவு பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தி வாங்க முன்வந்துள்ளதாக சவுதி அரேபிய பத்திரிகை ஒன்று கூறுகின்றது.
இதேவேளை, லிபிய ஜனாதிபதி முகமர் கடாபியின் மகள், பாதணியை வீசிய அந்த வாலிபருக்கு மாவீரன் பட்டம் சூட்டி விருது வழங்கப்போவதாக கூறியிருக்கிறார்.
ஈராக்கில் சிலர் தங்கள் பாதணி மீது அமெரிக்கக் கொடியைப்போர்த்தி அமெரிக்கா மீதான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.
பாதணியை வீசிய ஊடகவியலாளரை பொலிஸார் மடக்கிப் பிடித்த போதும், அதன் பிறகு நடந்த பொலிஸ் விசாரணையிலும் அவரது கை எலும்பு முறிந்துள்ளதுடன், முகத்தில் இரத்த காயம் ஏற்படும் அளவுக்குத் தாக்கி தாக்கி இருக்கிறார்கள் என்று அவரது சகோதரர் புகார் கூறி இருக்கிறார். இப்போது அவர் பாக்தாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். லெபனான் டி.வி. நிறுவனம் ஒன்று அவருக்குப் புதிய வேலை கொடுக்க முன்வந்துள்ளது.
புஷ் மீது காலணிகளை வீசிய ஊடகவியலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஈராக்கிடமே தங்கியுள்ளது
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின் போது அவர் மீது காலணிகளை வீசித் தாக்குதல் நடத்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர் முன்தாஸர் அல் ஸெய்டி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக ஈராக்கிய உயர் நீதிமன்றத்தின் பேச்சாளர் அப்துல் சதார் பிர்காதர் தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிமன்றமானது அவரைத் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிந்ததும், வெளிநாட்டுத் தலைவர் ஒருவரையும் அவருக்கு அருகிலிருந்த ஈராக்கிய பிரதமரையும் அவமதித்த குற்றச்சாட்டின் நிமித்தம் அவருக்கான தண்டனை குறித்து தீர்மானிக்கப்படும் என அப்துல் சதார் மேலும் கூறினார்.
இதன் பிரகாரம் முன்தாஸர் அல் ஸெய்டிக்கு 7 வருடங்கள் முதல் 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் கூறினார்.
இந்நிலையில் முன்தாஸரின் சகோதரரான துர்ஹாம் ஸெய்ட்டி, மேற்படி சம்பவம் குறித்து விபரிக்கையில், ஈராக்கிய படையினர் முன்தாஸரின் தலையில் துப்பாக்கியால் அடித்ததாகவும் அவரது கைகளும் முறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் தனோ பெரினோ செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில்,ஜனாதிபதி புஷ்ஷின் மீது காலணிகளை வீசிய ஊடகவியலாளருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பது தொடர்பில் ஈராக்கிய தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.
""ஜனாதிபதி புஷ், ஈராக் இறைமையுள்ள நாடு என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.
எனவே, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பது ஈராக்கிடமே தங்கியுள்ளது'' எனத் தெரிவித்த தனா பெரினோ, ஜனாதிபதி இதனை பாரதூரமான ஒன்றாக உணரவில்லை என்று குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment