ஷூ (shoe) போனது பெண் கிடைத்தது
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மீது காலணிகளை வீசிய ஈராக்கிய ஊடகவியலாளர் முன்தாஸர் அல் ஸெய்டிக்கு காணிக்கையாக, தனது 20 வயது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்போவதாக எகிப்திய தந்தை ஒருவர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்துக்கு அவரது மகள் அமால் சாத் குமாவும் (Amal Saad Gumaa) இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு அமால் சாத் குமா அளித்த பேட்டியில், ""நான் இதை எனக்குக் கிடைத்த கௌரவமாக உணர்கிறேன். நான் அந்த வீரபுருஷருடன் திருமணத்தில் இணையும் பட்சத்தில், நான் அவருடன் ஈராக்கில் வாழ விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.
முன்தாஸரின் சகோதரரான தெர்ஹாம் அல்ஷெய்டியுடன் இது விடயமாக தொடர்பு கொண்டு உரையாடியதாக தெரிவித்த அமால் சாத் குமாவின் தந்தையான சாத் குமா, "" அவருக்கு (முன்தாஸருக்கு) காணிக்கையாக செலுத்துவதற்கு என் மகளை விட பெறுமதியான ஒன்றை என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் எனது மகளுடன் திருமணத்துக்கு தேவையான அனைத்தையும் அவருக்கு வழங்கத் தயாராக உள்ளேன்'' என்று கூறினார்.
அமால் சாத் குமா, மத்திய எகிப்திலுள்ள மின்யா பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் பீட மாணவியாவார்.
எனினும் இத்திருமணம் சம்பந்தமாக முன்தாஸரின் சம்மதம் குறித்து இதுவரை தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆப்கான் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் புஷ்ஷின் மீது காலணிகளை வீசிய சம்பவம்
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின்போது அவர் மீது ஊடகவியலாளர் ஒருவரால் காலணிகள் வீசப்பட்ட சம்பவமானது, ஆப்கானிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சித் தொடரில் உள்வாங்கப்பட்டுள் ளது.
நிஜத்தில் காலணி வீச்சிலிருந்து புஷ் குனிந்து தப்பியபோதும், மேற் படி நாடகத்தில் அமெரிக்க ஜனாதிப தியின் முகத்தின் மீது காலணிகள் மோதுவதாக சித்திரிக்கப்பட்டுள் ளது.
ஆப்கானிஸ்தானின் சாதாரண மக்களில் பெரும்பான்மையினர் புஷ் மீது மிகுந்த வெறுப்புணர்வைக் கொண்டிருப்பதாக தெரிவித்த "ஸாங்இகாதர்' Zang-i-Khatar நகைச்சுவை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஹனீப் ஹம்காம், ""எமது நிகழ்ச்சியினூடாக ஈராக்கிற்கு உறுதியான செய்தியொன்றை அனுப்பி வைக்க விரும்புகிறோம்'' என்று கூறினார்.
ஊடகவியலாளர் முன்தாஸருக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் ஆர்ப்பாட்டம்
White House Shoe Protest
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் மீது காலணிகளை வீசிய ஊடகவியலாளர் முன்தாஸர் அல் ஸெய்டியை விடுதலை செய்யக் கோரி, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
""புஷ்ஷே உண்மையான குற்றவாளி. ஸெய்டி அல்ல. உலகெங்குமுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்காக ஸெய்டி பேசியுள்ளார்'' எனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ""புஷ்ஷை கைது செய்.
ஸெய்டியை விடுதலை செய்'' என கோஷமிட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், "புஷ் ஒரு யுத்த குற்றவாளி' என உரக்க சத்தமிட்டபடி அமெரிக்க ஜனாதிபதியின் பாரிய உருவ மைப்பு மீது காலணிகளை வீசினர்.
""1.5 மில்லியன் ஈராக்கியர்களதும் 4200 அமெரிக்கப் படைவீரர்களதும் மரணத்துக்கு புஷ்ஷே நேரடி பொ றுப்பு'' என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஈராக்கியப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
Shoe-Throwing Journalist Becomes Folk Hero (video)
0 விமர்சனங்கள்:
Post a Comment